கொட்டகலையில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தை மீட்பு

(க.கிஷாந்தன்)

 

திம்புள்ள பத்தனை பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தைஒன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பம் 16.02.2019 அன்று அதிகாலை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படிசிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

 

மிக நீண்ட காலமாக ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் 16.02.2019 அன்று அதிகாலை இந்த சிறுத்தை நபர் ஒருவரின் வீட்டுதோட்டத்தில் பன்றிக்கு போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.

 

தற்போது வீடுகளுக்கு அருகில் இந்த சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த காலங்களில் சிறுத்தைகளின் அட்டகாசத்தினால் தேயிலை மலைகளில் தொழிலில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

 

குறித்த சிறுத்தையின் உடல் நல்லதண்ணியில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.