ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்திற்கான வாணிபம் கையளிப்பு

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான செயற்திட்டத்தின் கீழ் “உதவிடுவோம் உறவுகளை காத்திடுவோம்”  எனும் தொனிப்பொருளின் வாழ்வாதாரத்திற்கான வாணிபம் நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இச்செயற்பாடானது கடந்த 5.12.2018 அன்று மட்டக்களப்பு தேற்றாத்தீவு சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியான  வைரமுத்து திசவீரசிங்கம் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்.
மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்த அக்குடும்த்திற்கு இரு உறவுகள் இறுதிக்கிரியைகளுக்காகவும் மற்றும் உடனடித்தேவைகளுக்காகவும் 80.000 ரூபாய்களை வழங்கியிருந்தார்கள்.
அதன் பிரகாரம் உதயம் நிறுவனமானது அவர்களை அணுகியபோது அக்குடும்பத்தினுடைய எதிர்காலம் பாதிக்கப்பட்ட நிலைமையே காணப்பட்டது ஆகையால் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுதிக்கொடுப்பதன்மூலம் அவர்களும் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழவேண்டும்
எனும் நோக்கில் அக்குடும்பத்திற்கான அங்காடி ஒன்றினை அமைத்துக்கொடுக்க தீர்மானித்திற்கு அமைய ஆரம்ப கட்ட வேலைகள்18.01.2019 ஆரம்பித்து 06.02.2019 அன்று முழுமைபெற்று வீ. திசவீரசிங்கத்தின் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வங்காடியானது 503.715,00 ரூபாய் செலவில் அமைத்துக்கொடுக்கப்பட்டதுடன் இச்செயற்பாட்டிற்காக நிதி வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவிப்பதோடு இவ்வேலைத்திட்டத்தை ஒருங்கமைத்த தாயக இணைப்பாளர் எம். டிலான் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயல்பாட்டாளர் எஸ்.ஜெயருக்சன் ஆகியவர்களுக்கும் மற்றும் ஜேர்மன் செயல்பாட்டாளர்களுக்கும் அமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.