பெண்ணுக்கு சிறைத்தண்டனையுடன் அபராதம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கசிப்பை தன்வசம் வைத்திருந்த பெண் ஒருவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபா தண்டப் பணமாக செலுத்துமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வெல்லாவெளி  பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள திக்கோடை பிரதேசத்தில் புதன்கிழமை வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையின் போது ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்னை நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும் 40 ஆயிரம் ரூபா தண்டப் பணமாக செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.