கொக்கட்டிச்சோலை காவல் பிரிவின் இருவேறு இடங்களில் கசிப்பு நிலையங்கள் முற்றுகை : சந்தேகநபர்களும் கைது.

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியின் இருஇடங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு, கசிப்பு உற்பத்திகளும் இன்று(14) பொலிஸார் மற்றும் கலால் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டன.

கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட குழுவினமடு, தாந்தாமலை ஆகிய பகுதிகளிலே கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உற்பத்திக்கு தயாரான நிலையில் குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு கிராம உத்தியோகத்தர் உதவியுடன் கொக்கட்டிச்சோலை காவல்துறையினராலும், தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் விற்பனைக்கு தயாரான நிலையிலிருந்த கசிப்பு பொதுமக்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் உதவியுடன் கலால் திணைக்கள உத்தியோகத்தர்களாலும் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.