வாழைக்காலை சுவாதி அம்மனுக்கு திருச்சடங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில், வாழைக்காலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார், சுவாதியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்டைய முறைப்படி சுவாதி அம்மனுக்கு சடங்கு நடைபெறும் ஆலயமாக, இவ்வாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகும் இவ்வாலயத்தின் சடங்கு எதிர்வரும் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது.