திருமலையில் அமெரிக்க தூதுவர்கள் தமிழர் தரப்பில் பல்வேறு விடயங்கள் எடுத்துரைப்பு .பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன்.ஆளுநர்.

பொன்ஆனந்தம்
எனது ஒருவருட கால இந்த ஆளுநர் கடமையின் போது  பாதிக்கப்பட்ட எமது மக்களின் சகல பிரச்சனைகளையும் முடிந்தளவு தீர்ப்பதற்கு என்னாலான முயற்சிகளை நான் எடுப்பேன்
என கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மூதூர் கிழக்கில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சூடைக்குடா பாரதிவித்தியாலயத்தில் அமேரிக்க அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட பாடசாலை யின் மாடிக்க்கட்டிடத்தை அமேரிக்க துதுவாராலய அதிகாரிகளுடன் கலந்து கொண்டு இன்று காலை 9.00மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநரும் இணைந்து வைபவ ரிதியாக திறந்து வைத்தார்கள்;.

தி.மூ.சூடைக்குடா பாரதி வித்தியாலய அதிபர் எஸ்.கிருபாகரன் தலமையில் நடைபெற்ற இன்நிகழ்வில் அமேரிக்க துதுவராலய அரசியல் விவகாரங்களுக்குப்பொறுப்பான அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளும் கலந்துசிறப்பித்தனர். இதன்போது கருத்துவெளியிட்ட ஆளுநர்  அமேரிக்க துதுவராலய அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் கிழக்குமாகாண மக்களுக்கு வழங்கும் உதவிக்கு தனதும் அரசின் சார்பான நன்றியைத்தெரிவித்தார். இங்கு தூதரக அதிகாரிக்கு பாடசாலை நிருவாகம் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதனையும் ஆளுநருடன் கலந்துகொண்ட அதிகாரி கட்டிடத்தை திரைநீக்கம் செய்து திறந்து வைப்பதனையும் விருந்தினர்கள் பாடசாலை நிருவாகத்தினால் வரவேற்கப்படுவதனையும் பிற நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

இதேவேளை

திருமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்அதிகாரிகளிடம் கன்னியா வெந்நீர்ஊற்று  மற்றும் திருக்கோணேஸ்வரர் ஆலய ஆக்கிரமிப்பு விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டதாக அவர்களுடனனா சந்திப்பில் கலந்துகொண்டதிருகோணமலை பட்டணமும் சூழலம் பிரதேச சபை தவிசாளர் டாக்டர் ஜி. ஞானகுணாளன் தெரிவித்தார்.

சமகால அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் மேம்பாடுகள் குறித்தும் இச்சந்தர்ப்த்தில் விளக்கமளிக்கப்பட்டதாகவும் அவர்சுட்டிக்காட்டினார்.அது கறித்த பல்வேறு விடயங்களை தூதக அதிகாரிகள் கேட்டு அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சந்திப்பு தமிழரசுக்கட்சியின் திருகோணமலை  அலுவலகத்தில் இடம்பெற்றது.

அமேரிக்க தூதரகத்தின்  அரசியல் விவகாரங்களுக்குபொறுப்பான அதிகாரிகள் குழு ஒன்று நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தற்கால அரசியல் மற்றும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து கலந்துரையாடியது.

இதனடிப்படையிலேயே தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளையும் நேற்று; சந்தித்தது. இச்சந்திப்பில் அமேரிக்க அரசியல்விவகாரங்களுக்கான விஷேட அதிகாரி ஆர்.இ.சந்திப்,மற்றும் அன்தனி எப் ரின்சுல்லி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், நகரசபைத்தலைவர் ந.இராசநாயகம், பட்டணமும் சூழலும் பிரதேச சபைத்தலைவர் ஜி.ஞானகுணாளன்,மற்றும் இராசம்பந்தனின் பிரத்தியேக செயலாளர் குகதாசன் உள்ளிட்டவர்கள்கலந்துகொண்டிருந்தனர்