காஞ்சிரங்குடா காமாட்சியில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நேற்று(09) ஞாயிற்றுக்கிழமை வித்தியாலயத்தின் அதிபர் சோ.சுந்தரமோகன் தலைமையில் இடம்பெற்றது.

கொட்டும் மழையிலும், தேசிய கொடியேற்றல், ஒலிம்பிக்தீபம் ஏற்றல், மாணவர்களின் அணிநடை மரியாதையுடன் ஆரம்பித்த விளையாட்டுப்போட்டியில், அஞ்சல் ஓட்டங்கள், குறுந்தூரஓட்டம், பலூன்ஊதி ஒடைத்தல், மிட்டாய்; ஓட்டம் போன்ற மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளும், வேகநடை, அஞ்சல் ஓட்டம் போன்ற போட்டிகள் பழைய மாணவர்கள், பெற்றோர்களுக்காகவும் நடாத்தப்பட்டன.
காலச்சூழலுக்கு ஏற்ற வகையில் மூன்று இல்லங்களின் விநோதஉடைப்போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராசா, பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் க.திவிதரன், பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.