தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் கரிசனையுள்ள நண்பர்கள் அமைப்பினால் மட்டில் கவனயீர்ப்பு .

நிற்போம் நிதானிப்போம் எதிர்காலத்தை  நோக்கிநடப்போம் . இதுவே எமது உறுதி என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் கவனஈர்ப்பொன்று நேற்றைய தினம் சனிக்கிழமை (09) மாலை நடைபெற்றது.
கல்லடிப்பாலத்தில்  தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் தற்கொலைகளை கட்டுப்படுத்தும்  வகையில் மட்டக்களப்பிலுள்ள நலன் விரும்பிகள், பொது மக்கள் ஒன்றிணைந்து கரிசனையுள்ள நண்பர்கள் என்ற புதிய அமைப்பினால் இந்த கவன ஈர்ப்பு நடத்தப்பட்டது
இதில், கலந்து கொண்ட வர்கள் மனதால் துணிவோம் அன்பால் வாழ்வோம் , எனது வாழ்க்கை மகிழ்ச்சியானது, வெற்றியுடன் இணைந்ததே வாழ்வு, நேற்று போக இன்று வரும் நாளை என்பது இன்றொரு நாள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரத்தினை விநியோகித்தனர்.
அத்துடன், கோசங்களை எழுப்பியதுடன் பதாகளையும்  ஏந்தியிருந்தனர்.