வயற்காணிகளை செய்மதி தொழிற்நுட்பத்தின் ஊடாக வரைபடம் தயாரிக்க நடவடிக்கை

நாட்டின் வயல் நிலங்களை செய்மதி தொழிற்நுட்பத்தின் ஊடாக கணணி வரைப்படங்களை மேற்கொள்வதற்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது உள்ள வயல் நிலங்களின் எண்ணிக்கை தொடர்பான ஆவண ரீதியிலான தரவுகள் இல்லாததின் காரணமாண இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் கடல்தொழில் நீரியியல்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்தார்.
இந்த நிலைமையின் காரணமாக உர நிவாரணத்தை வழங்குதல். வயல் காணிகளுக்கு இழப்பீடுகளை வழங்குதல். மற்றும் உத்தேச அறுவடை தொடர்பான அறிக்கையை தயாரித்தல் ஆகியவற்றுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதனால் செய்மதி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டிலுள்ள வயற்காணிகளின் வரைப்படத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.