மட்டக்களப்பில் ஊடக சுதந்திரத்தினைவலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் முன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்  ஊடக சுதந்திரம் தொடர்பிலான கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை புதன்கிழமை (06)  மாலை நடத்தினர.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் நா.வில்வரெத்தினம் தொடர்பில் அவதூறான வகையில் இணையத்தளங்களில் பொய்யான தகவல்களை  வெளியிடப்பட்டமைக்கு எதிர்பபுத் தெரிவித்தே செயலக  உத்தியோகத்தர்கள் இந்தக் கவணஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யாதே! அரச அதிகாரிகள் மீது வேண்டுமென்று அவதூறு வெளிப்படுத்துவதை நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை உத்தியோகத்தர்கள் இன்று மாலை வேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,  கருத்தக்களையும் தெரிவித்தனர்