உன்னிச்சை, ஆயித்தியமலை பகுதியிலும் யானையின் நெருக்குதல்

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிவுக்குட்ட ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளை அண்டியுள்ள கிராமங்களுக்குள் தினமும் உட்புகும் காட்டு யானைகளால் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

காடுகளைக் கடந்து வந்து இந்த யானைகள் கிராமங்களுக்குள் புகுவதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கிராம வாசிகளின் இருப்பிடங்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்படுவதோடு நீண்ட காலப் பயன் தரும் மரங்களான தென்னை, மா, பலா, வாழை  உள்ளிட்டவையும் வீட்டுத் தோட்டப் பயிர்களும் காட்டு யானைகளால் துவம்சம் செய்யப்படுவதாக கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த வாரம் தினமும் இரவில் கிராமங்களுக்குள் ஊடுருவி நடமாடித் திரியும் காட்டு யானைகளால் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டுள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

 

 

கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானைகளைத் விரட்டும்போது அவை மூர்க்கமடைந்து தாக்க வருவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

கிராம மக்களின் அச்சத்தைப் போக்கவும் தோட்டங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கும் காட்டுக்குள் யானைகளை விரட்டியதப்பதற்கு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உதவி புரிய வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.