ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி மலையகத்தில் பல பாகங்களிலும் ஆர்பாட்டங்கள் முன்னெடுப்பு

(க.கிஷாந்தன்)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி பொகவந்தலாவ நகரில் 05.02.2019 அன்று ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் பொகவந்தலாவ கொட்டியாகலை, செல்வகந்த, ஜெப்பல்டன், பொகவந்தலாவ கிழ் பிரிவு ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டமானது பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் இருந்து பொகவந்தலாவ செல்வகந்த சந்திவரை பேரணி ஒன்று இடம்பெற்று அட்டன் பொகவந்தலாவ மற்றும் பலாங்கொட பிராதன வீதிகளை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பொகவந்தலாவ அட்டன் போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டிருந்தது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருப்பு கொடியினை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கூட்டு ஒப்பந்தத்தில் சைச்காதிட்ட தொழிற்சங்கங்கள்  தொழிலாளர்களின் ஆலோசனைகளை கேட்காமல் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டு விட்டு தோட்ட தொழிலாளர்களை காட்டி கொடுத்து விட்டனர்.

இன்று கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்ட தொழிற்சங்கங்கள் ஊடகங்களில் ஊடாக அறிக்கை விடுகிறார்கள். தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த அடிப்படை சம்பளம் 700ருபா போதுமானதாக மக்கள் கூறியதாக பொய்யான அறிக்கைகளை கூறுகிறார்கள்.

நாங்கள் அறிக்கை விடும் அரசியல் வாதிகளுக்கு ஒன்று கூறுகிறோம். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு கலந்துரையாடி விட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டதை எங்களால் எற்று கொள்ள முடியாது.

அதனால் தான் இன்று தமிழ் முற்போக்கு கூட்டனி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்ட வர்த்தமானியை தடை செய்து இருக்கிறது. எனவே நாங்கள் கோருவது எல்லாம் எங்களின் அடிப்படை சம்பளம்  ஆயிரம் ருபாவை பெற்று தர உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி அக்கரப்பத்தனை பெல்மோரல் மற்றும் லிந்துலை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.