மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 5 சிறைக்கைதிகள் விடுதலை

71 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 5 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

 

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தலைமையில் நடைபெற்ற சிறைக்கைதிகள் விடுதலை வைபவத்தில் மதத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் சிறுகுற்றம் புரிந்தோர் சிறிய தண்டனைக் கைதிகள் ஆகியோரே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.