ஒரு வார காலத்திற்கு தேசிய கொடி பறக்க விடப்பட வேண்டும்

நாட்டின் 71ஆவது சுதந்திர தினத்தையொட்டி  ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள்,வீடுகளிலும் தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் 71ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளதுடன் அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள் நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.