அரசடித்தீவில் பொங்கல் விழா

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா அறநெறிப்பாடசாலையில் நேற்று(03) ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா இடம்பெற்றது.

இதன்போது, பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைக்கப்பட்டு பூசை நிகழ்வுகளும் நடைபெற்றன. மேலும் யோகாசன பயிற்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாசிரியர் சி.ருசகுமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் மேகலா முகுந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.