மாவடிமுன்மாரிப் பாடசாலையில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று(03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், மாணவர்களின் மைதானப்பவனி, அணிநடை மரியாதை, குறுந்தூர ஓட்டங்கள், அஞ்சல் ஓட்டங்கள், உடற்பயிற்சி கண்காட்சி போன்றவை இடம்பெற்றன.

இதன்போது, விளையாட்டுக்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் அணிநடை, இல்லச்சோடணை போன்றவற்றில் வெற்றிபெற்ற இல்லங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மற்றும் கல்விசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.