ஊழலுக்கு எதிரான தரப்படுத்தல் சுட்டியில் இலங்கைக்கு 80 புள்ளி

ஊழலுக்கெதிரான உலகளாவிய வலையமைப்பான ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டியின்படி, 2018ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்கதொரு முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ளது.

இத்தரப்படுத்தலின்படி இலங்கையானது 2017ஆம் ஆண்டு 38 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டிருந்ததுடன், கடந்த ஆண்டும் அதே 38 புள்ளிகளையே தக்கவைத்துக் கொண்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் இக்குறிகாட்டியின்படி பூச்சியம் தொடக்கம் 100 புள்ளிகள் என்ற அடிப்படையில் நாடுகள் தரப்படுத்தப்படும். இதில் பூச்சியம் எனின் ஊழல் அதிகமுள்ளதாகக் கருதப்படும் அதேவேளை, 100 எனின் ஊழலற்ற சிறந்த நாடு என்றவாறும் அமையும்.

இந்நிலையில் மேற்குறித்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 180 நாடுகள் பெற்றுக்கொண்ட புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பட்டியலில் இலங்கை 89ஆவது இடத்தில் உள்ள அதேவேளை தெற்காசியவில் மூன்றாம் இடத்திலுமுள்ளது.

குறிப்பாக இத்தரப்படுத்தலில் இந்தியா 25ஆவது இடத்திலும் பூட்டான் 78ஆவது இடத்திலும் உள்ள நிலையில், இலங்கை அவ்விரு நாடுகளையும் விட பின்தங்கிய நிலையில் உள்ளமையை ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.