மட்டு. வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்’ – எம்.கே.சுமந்திரன்

சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு, இன்று காலை விஜயம் மேற்கொண்டு, வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாப்பட்டது.

குறிப்பாக வைத்தியர்களின் பற்றாக்குறை, திண்மக் கழிவுகளை அகற்றுவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள், ஏனைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கும்போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பிலும், இங்கு விசனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.