காத்தான்குடியில் சட்டவிரோத உணவு விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு— காத்தான்குடி பொலிஸ் பிரவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதி மற்றும் கடற்கரை பிரதேங்களில், நேற்று (01) மாலை சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது, மனித பாவனைக்குதவாத பழுதடைந்த, காலாவதியான, லேபல் இடப்படாத உணவு மற்றும் பழங்களை விற்பனை செய்த ஆறு வர்த்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், பெருமளவு பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களும் சுகாததரா அதிகாரிகளினால் மீட்கப்பட்டன.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.