வாகரையில் பொங்கல் விழா பா.உ.சுமந்திரன் கலந்துகொள்கின்றார்.

க. விஜயரெத்தினம்)
வாகரையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் பெருவிழா இடம்பெறவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டம் வழமையாக நடாத்தும் “தமிழ்தேசிய பொங்கல் விழா” எதிர்வரும் சனிக்கிழமை (2019.2.2) பி.ப,2 மணிக்கு வாகரை பால்சேனை பொது விளையிட்டு மைதானத்தில் வாகரை பிரதேச சபை தவிசாளர் சி.கோணலிலகம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

“தொலைத்(ந்)தவைகள் எத்தனையோ” எனும் தலைப்பில் கவிஞர் அண்ணீதாசன் தலைமையில் கிரானூர் பகிரதன், கதிரவெளியூர் கணதீபன், மகிழையூர் தர்சினி, சந்தியூர் சேயோன், அம்பிளாந்துறையூர் அரியம், பங்கேற்று கவிதை மழை பொழியவுள்ளனர்.

“தற்காலத்தில் தமிழ் வளர்கிறதா? தளர்கிறதா?
எனும் தலைப்பில் கதிரவன் இன்பராசா தலைமையில் சோலையூரான் தனுஷ்கரன், பாலமீன்மடு கலைவேந்தன், மட்டுநகர் வரதகரன், கவிஞர்களான எழில் வண்ணன், அன்பழகன் குரூஷ், அம்பிளாந்துறையூர் அழகுதனு ஆகியோர் பட்டிமன்றம் நடத்தவுள்ளனர்.

பொங்கல் பேருரையினை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடகபேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுவதுடன் தொடக்கவுரையினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி சிரேஷ்ட தலைவருமான பொன் செல்வராசாவும், வரவேற்புரையினை முன்னாள் கிழக்கு மகாணசபை உறுப்பினரான மா.நடராசா ஆற்றுவார்.

பொங்கல் விழாவில் சிறப்புரைகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மகாணசபை உறுப்பினர்களின் இ.பிரசன்னா,கோ.கருணாகரம் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.