திருமலையில் கள்ளநோட்டுக்களுடன் ஒருவர் கைது.

(க.விஜயரெத்தினம்)
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் ஒரு இலட்சத்தி 75,000 ரூபாய் கள்ள நோட்டுக்களுடன்  சந்தேக நபரொருவரை நேற்றிரவு(30) கைதுசெய்துள்ளதாக மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த அபூபக்கர் தௌபீக் (52வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரை மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச். எம். பீ. குலதுங்க குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். பீ. விமல் மற்றும் 39035 சமன்த, 67627 ரத்னசேகர, 9985 துலானி, 10175 குமாரி ஆகியோர்கள் சென்று சோதனையிட்ட போது அவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதில் ஐயாயிரம் ரூபாய் தாள்கள் 16வும் ஆயிரம் ரூபாய் தாள்கள் 95 அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஹொரவ்பொத்தான நகர்ப்பகுதியில் 1000 ரூபாய் தாள்கள் 29வுடன் திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்களை ஹொரவ்பொத்தான பொலிஸார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.