மட்டக்களப்பில் விபத்தில் விரிவுரையாளர் பலி

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 08.10 மணியவில் நடந்த விபத்தில் மட்டக்களப்பு அரசினர் ஆசியரியர் கலாசாலை விரிவுரையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கலயைச் சேர்ந்த கே.கோமளேஸ்வரன் (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து வண்டியில் செங்கலடியில் இருந்து மோட்டார் சைக்கிலில்  மட்டக்களப்பு நோக்கி பயணித்தவரே மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளாக்கிய தனியார் பேருந்து சம்பவ இடத்தில் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளது. பின் சாரதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் இது தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.