பணம் அறவிடும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – கல்வி அமைச்சர்

வசதிகள் மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிரூபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

வசதிகள் மற்றும் சேவை கட்டணங்கள் அறிவிடும் போது குறித்த பணம் தேசிய பாடசாலையாயின் கல்வி அமைச்சின் செயலாளரிடமும், மாகாண பாடசாலையாயின் மாகாண கல்வி செயலாளரிடம் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தன்னுடைய விருப்பின் பிரகாரம் சுற்று நிருபத்தை மீறி பல தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பணம் அறவிடுவதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.