கொக்கட்டிச்சோலையில் சகோதர சங்கமம் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் சகோதர சங்கமம் நிகழ்வு கடந்த 25ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை இடம்பெற்றது.

மாணவர்களின் ஊடாக இனரீதியாக ஒற்றுமையினையும், புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் பொருட்டு இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணக்கல்வி திணைக்களம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகம், புஐணுஃநுளுஊ பிரிவு (திருகோணமலை) இணைந்து இச்சகோதர சங்கம நிகழ்வினை ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தனர்.
இதில், தாறுஸ்சலாம் மகா வித்தியாலய, மங்களராம மகா வித்தியாலய, கொக்கட்டிச்சோலை இ.கி.மி.வித்தியாலய, மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மு.பவளகாந்தன் அவர்களின் வழிகாட்டலில், நடைபெற்ற நிகழ்வில், மூன்று மூன்று வலயங்களின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், வளவாளர்களும் பங்குபற்றினர். மேலும், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் மன்சூர், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி. அகிலா கனகசூரியம் மட்டக்களப்பு மேற்கு பிரதி கல்வி பணிப்பாளர் க.ஹரிகரராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, கலந்துகொண்டிருந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.