மட்டக்களப்பு பிராந்தியத்தில் கல்விசாதனை படைத்த மாணவர்களுக்கு பணப்பரிசில்

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு பிராந்தியத்தில்கல்விசாதனை படைத்த 2 ௦ ௦ மாணவர்களுக்கு இன்று பணப்பரிசில் கௌரவிப்பு

{மட்டக்களப்பு சிஹாரா லத்தீப்}

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் வழிகாட்டுதலில் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கூட்டுத்தாபனம் மட்டக்களப்பு பிராந்தியத்திலடங்கும் மட்டக்களப்பு ,அம்பாறை மாவட் டங்களில்கல்வித்துறையில் சாதனைபடைத்த 2 ௦ ௦ மாண வர்களுக்கு  அண்மையில் (2 7) பணப் பரிசில்களும்,சான்றிதழ் களும் வழங்கிக்கௌரவித்தது.

ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய சிரேஸ்ட முகாமையாளர் பீ.புவனேந்திரன் தலைமையில் மட்டக் களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில்  நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்.மாணிக்கம் உதயகுமார்,பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு இந்த பணப்பரிசில்களை யும் சான்றிதல்களையும் வழங்கிவைத்தார் .

இங்கு ஐந்தாம்ஆண்டு புலமைப்பரிசில்,கல்விப்பொது தரா தர சாதாரணம், மற்றும் உயர்தரம் பரீட்சைகளில் 2016 மற் றும் 2017 கல்வியாண்டில் சாதனைபடைத்த மாணவர் களு க்கே இந்த இந்த பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு பிராந்திய விற்பனை முகாமையாளர். கெலும் ஜெயசிங்க, மட்டக் களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர்  திருமதி .சரண்யா சுபாஹரன், உட்பட பல பிரமுகர்களும்,பெருமளவு மாணவர்களும் பெற்றோ ரும் கலந்துசிறப்பித்தனர்.

அரசாங்க அதிபர் உதயகுமார் இங்கு கருத்து வழங்கு கையில் இம் மாவட்டத் தில்  சமூகம் சார்ந்த நிகழ்வு களை பொறுப்பினை உணர்ந்து செயல்படுத்த பல நிறு வனங்கள் அக்கறை காட்டாமல் தமது வியாபார நோக் கிலேயே செயல்படுகின்றன.

ஆனால் பல சமூகங்கள் சார்ந்தமாணவர்கள் ஒன்றாக இணைந்துசெயல்படும்பொறுப்புள்ள நிகழ்வினைஏற்பாடு செய்வதில் இக்கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியமைக்கு இதன் நிருவாக முகாமையாளர்களை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்த வழிவகுக்கும் அதேபோல் பெற்றோரும் தமது பிள்ளை களை தமது பிரதேசத்துக்கும்,நாட்டுக்கும் உகந்த நல்ல பிரஜை யாகவும் நல்ல மனிதர்களாகவும் உருவாக்க இவ்வாறான நிகழ்வுகளில்உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்,