கல்விமாணி பட்டதாரிகளுக்கு கிழக்கு ஆளுநரால் ஆசிரியர் நியமனம் வழ ங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனக்கடிதம் நேற்று(29) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனக் கடிதங்களை, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார்.
ஆளுநரின் விஷேட பணிப்புரைக்கு அமைய தகுதி அடிப்படையில் கல்விமாணி பட்டத்தினை பூர்த்தி செய்த 19பட்டதாரிகளுக்கு இந்நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நியமனத்தில், 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.