ப​டைப்புழுவை கட்டுபடுத்த முடியும்’

விவசாயத்திணைக்களம் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளது இணைந்த செயற்பாட்டின் மூலமே அந்நிய படைப்புழுவைக் கட்டுப்படுத்தமுடியமென்றும் அதற்கான ஒத்துழைப்பை அனைவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

அந்நிய படைப்புழுவைக் கட்டுப்படுத்தல் தொடர்பில், மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் இன்று (29) காலை நடைபெற்ற  மாவட்ட மட்டக் குழுக் கூட்டத்தில் தலைமையுரையாற்றும் போதே, மட்டு.அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.