இன்றைய மாணவர்கள் பலர் புத்தகத்தோடு மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

இன்றைய மாணவர்கள் பலர் புத்தகத்தோடு மட்டும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிலரே புத்தக்கத்தோடு அனுபவங்களையும் இணைத்து பண்பாடுகளை வளர்த்துக்கொண்டிருக்கின்றனர் என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச பொங்கல் விழா முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் இன்று(26) சனிக்கிழமை நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

பிரதேச செயலாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பண்பாடுகளை இளம் தலைமுறைக்கு கடத்தி செல்லும் நோக்கில் இவ்வாறான நிகழ்வுகளை பிரதேச ரீதியாக நடாத்துகின்றோம். இவற்றோடு கல்விக்காகவும் சிறு உதவிகளை வழங்கி வருகின்றோம்.
இங்கு 24வகையான பொங்கல்களை பொங்கியிருக்கின்றோம். அத்தோடு விவசாய தொழிலோடு தொடர்புடைய பண்பாடுகள் பலவற்றை காட்சிப்படுத்தியுள்ளோம். இவ்வாறான விடயங்கள் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் இதன்மூலம் எமது பண்பாடுகள் அழிந்து செல்லாது நிலைத்திருக்கும் என்றார்.