மட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா

மட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இந்தியாவுடன் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் அங்கமான ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே மேற்படி இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்போது நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.