மட்டக்களப்பு கிரானில் 2 மாத பெண் சிசு மீட்பு

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தின் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 2 மாதம் மதிக்கத்தக்க பெண் சிசுவினை பொதுமக்கள் கண்டெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9.30 மணியளவில் கிரான் பாடசாலை வீதியால் சென்ற நபர் ஒருவர் வீதியில் கிடந்த சிசுவின் அழுகுரல் கேட்டு அருகில் வசிப்பவர்களிடம் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக கிரான் கிழக்கு கிராம சேவகர் ஆர்.அச்சுதனுக்கு தகவல் வழங்கியமையினையடுத்து அவர் பொலிசாருடன் இணைந்து மேற் கொண்ட நடவடிக்கையினால் சிசு மீட்க்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.