போரால் பாதிக்கபட்ட படுவாங்கரையை அபிவிருத்தி செய்வதே அரசின் பிரதான நோக்கம் – சோ. கணேசமூர்த்தி

கடந்த முற்பது வருடகால யுத்தம் எமது பிரதேசத்தினை வெகுவாக பாதித்தது. அதிலும் யுத்த களமாக மட்டக்களப்பில் காணப்பட்ட படுவாங்கரை யாரின் கண்ணுக்கும் தெரியாத பிரதேசமாக உள்ளது. யுத்தம் ஓய்ந்து பத்துவருட காலம் சென்ற பின்னரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல்வாதிகளால் இந்த படுவாங்கரையில் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை. இந்த மக்களுக்கு அரசின் நிதிகள் நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக நாட்டின் பிரதமரின் சிபாசுக்கமைய ஜனாதிபதியினால் போரதீவுபற்று பிரதேச செயலகத்;தின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டேன் என முன்னால் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளருமாகிய சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அன்மையில் நவகிரி நகருக்கும் களுவாஞ்சிகுடிக்குமான போக்குவரத்து வசதியினை ஏற்பாடு செய்து வைத்த நிகழ்;வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த போது தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது. வெல்லாவெளி பிரதேச மக்கள் அடிப்படை தேவையின்றி பல்வேறு நெருக்கடியில் வாழ்கின்றார்கள். இதனை நாட்டின் பிரமரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். இதனால் பாரிய உதவியினை இம் மக்களுக்கு செய்வதற்காக பிரதமர் தயாராக உள்ளார். மாவட்ட மக்களின் ஆரம்ப தேவையினைப் பூர்த்தி செய்வதற்கு எனக்கு நூறு மில்லியனை ஒதுக்கியுள்ளார். அதேபோல் அரசின் நிதியினை மக்களுக்கு சேர்ப்பதற்கான செயல்பாட்டினை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருகின்றார். இதனைப் பொறுக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தனது அரசியல் வங்குரோத்து காரணமாக அதிகாரிகளின் மேல் பழிபோடும் நிலைக்கு சென்றுள்ளார்.
அரசியலில் இவர் கந்துக்குட்டி. இவருக்கு எப்படி மாவட்ட அபிவித்தியினை செய்வது என்பது தெரியுமா என கேட்கத் தோன்றுகின்றது.இவர் பிறந்த படுவாங்கரையில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திகாந்தனால் உருவாக்கப்பட்ட வலக கல்வி அலுவலகத்தில் முதலாவது கல்வி அதிகாரியாக நியமிக்கபட்டவர். இவர் இப்பிரதேசத்தில் பிறந்தவர் என்பதால் இப் பிரதேசத்தில் கல்வியினை அபிவிருத்தி செய்வார் என்பதற்காக நிமிக்கபட்டார். ஆனால் நடந்தது என்ன 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவாசிக்க தெரியாதவராக்கினார் என தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இவரும் கல்வி அதிகாரியாக இருந்து மக்களுக்காக எதுவுமே புடுங்கவில்லை. கடந்த மூன்று வருடகாலத்தில் தமிழ் அரசியல்வாதியாக இருந்து என்ன திட்டத்தினைக் மாவட்டத்துக்கு கொண்டுவந்தார் எதுவுமே இல்லை.இவரை யாரும் அழைத்து விழாக்கொண்டாடும் நிலையில் மக்கள் இல்லை. அன்மையில் பெரிய பாடசாலையின் பரிசளிப்பு விழாவுக்கு தன்னை அழைக்குமாறு தூது அனுப்பியும் இவரால் எந்த நன்மையும் இல்லை என்பதனை உணர்ந்து இவரை நிர்வாகம் அழைக்கவில்லை. இவர் வீட்டுக் கதவைத் திறந்தே வைத்துள்ளார் ஏனெனின் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக அல்ல யாராவது சமையறை திறப்புவிழா,எம்.ஜி.ஆர் நினைவு தினம்,பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா போன்றவற்றுக்கா அழைப்பு வரும் என்று. இந்த நிலைக்கு இவர்கள் நிலை சென்றுள்ளது.
இதனாலே பிரதமருடன் செய்யப்பட்ட உடன்படிக்கையில் வடகிழக்கில் அபிவிருத்தி செய்யப்படும் போது தங்களைப் முன்னிலைப்படுத்துமாறு கோரிக்கையிட்டுள்ளார்கள்.இந்த அரசாங்கத்தின் செயல்திட்டங்களை மக்களின் கையில் ஒப்படைக்கும் செயல்பாட்டை மேற்கொள்ளுதல் பிரதேச செயலாளராகும்.இப்படிப்பட்டவர்களை விபமர்சிப்பது அநாகரிகமற்ற செயல்பாடாகும்.
இவர் கடந்த மூன்று வருடகாலத்தில் செய்த காரியம் அதிகாரிகளை இடம் மாற்றியும்,விமர்சித்ததும்தான் மிச்சம் என மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவர் கல்வி அதிகாரியாக இருந்து செய்த சாதனைக்கு எத்தனை தடவை இடம் மாற்றம் செய்யதிருக்க வேண்டும் என்பதனை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
நான் கட்டிய கல்வியற் கல்லூரிக்கு தலைவரையும்,சிற்றூழியரையும் போடுகின்றார். நான் போர் காலத்தில் கட்டிய பாடசாலைகளை திறப்பதற்கு நாட்கள் போதாமல் இருந்தது. அப்படி அரசியலும், மாவட்ட அபிவிருத்தியும் செய்தவன். என்னைப் பார்த்து தோத்தவன் என்கின்றார். இவருக்கான அரசியல் வங்குறோத்தை வெளிப்படுத்தும் நேரம் இது இல்லை. எங்கள் தலைவர் விடகிழக்குக்கு 2000மில்லியன் ஒதுக்கியுள்ளார். இதில கனிசமான தொகையினை படுவாங்கரைக்கு ஒதுக்குவேன் என்பதனை தெரிவித்தக் கொள்கின்றேன் என்றேன்.