மட்டு.மாவட்ட அரசாங்க அதிபரின் கிராம வலம் – சவுக்கடிக் கிராம அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தின் காணிப்பிரச்சினைகள், மதுபானப்பாவனை, சட்டவிரோத செயற்பாடுகள் கல்விசார், பாதுகாப்பு சார் பிரச்சினைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர மா.உதயகுமார் இன்றைய தினம் தெரிவித்தார்.
அரசாங்க அதிபரின் மாதம் ஒரு கிராமம் என்ற கிராம வலம் திட்டத்தின் முதலாவது கிராமமான சவுக்கடிக் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சவுக்கடி பாரதி வித்தியாலயத்தில் அதன் அதிபர் க.பாலசசந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சவுக்கடி பாரதி விததியாலயத்தினை தரம் 6இல் இருந்து 11வரை உயர்த்துதல், விளையாட்டு மைதானம் அமைத்தல், தளபாட வசதிகளை ஏற்படுத்தல், பாடசாலை இடைவிலகலைக்கட்டுப்படுத்துதல், உள்ளிட் கல்வி விடயங்கள் ஆராயப்பட்டன.
சிறுவர் பெண்கள் தொடர்பான பிரலச்சினைகளான இளவயது திருமணங்களைக் கட்டுப்படுத்துதல், சட்ட ரீதியற்ற திருமணங்களுக்கெதிரான நடவடிக்கைகள், 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் உடைய குடும்பங்களின் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனை கட்டுப்படுத்துல் போன்ற விடயங்கள்.
சுகாதாரம் மற்றும்; போசாக்கு, போக்குரவத்து மற்றும் வீதி அபிவிருத்தி, தொழில்பயிற்சி, போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தொழில்வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள், வீடு, குடிநீர, மலசல கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், காணி விடயங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
ஒவ்வொரு பிரச்சினையும், பொது மக்கள் முன்நிலையில் குறிப்பிட்ட திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு தீர்வு வழங்கப்பட்டதுடன், அவற்றுக்கான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படும் வகையில் அரசாங்க அதிபரால் பணிப்புரைகளும் வழங்கப்பட்டன.
காணி தொடர்பான விடயங்களுக்கு சட்டவிரோதமான காணி அபகரிப்புகள் குறித்து பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொது மக்களுக்குரிய குடியிருப்புக் காணிகளுக்கான பத்திரஙகள் ஏப்ரல்மாதத்துக்குள் வழங்கபபடும் என்று உறுதியளிக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு ஏறாவூர் பொலிசார் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரதித் தவிசாளர் இராமச்சந்திரன், பிரதேச செயலாளர் என். வில்வரெத்தினம், மாவட்ட திட்டமில் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி கே.பாக்கியராஜா, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நலின் ஜயசுந்தர, பிரதி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம சேவையாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும்கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் நிறைவில் தளபாடத்தட்டுப்பாட்டினைக் குறைக்கும் வகைய்ல் சவுக்கடி பாரதிவித்தியாலயத்திற்கு 20 பிளாஸ்ரிக் கதிரைகள் அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டன.