இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு மாநாடு.

இலங்கையில் போருக்கு பின்னரான சமூக பொருளாதார அபிவிருத்தியில் புலம் பெயர் மக்களின் பங்களிப்பு என்ற தொனிப் பொருளிலான மாநாடொன்று இன்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு செங்கலடிபதுளை வீதியில் உள்ள புலையவெளி கிராமத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பிரித்தானியாவின் புலம் பெயர் இலங்கைக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
புலம் பெயர் அமைப்புக்கள் அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதில் இருக்கக் கூடிய விடயங்கள், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பெயர் தமிழரிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன ஆகிய தலைப்புகளில் இரண்டுஅமர்வுகள் நடைபெற்றன.
சிரேஸ்ட ஊடகவியலாளர் பூபாலரெத்தினம் சீவகன் தலைமையில் நடைபெற்ற இமம் மநாட்டில் இந்த இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமர்வுகளில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் பேராளர்கள் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், இலங்கைக்கான புலம்பெயர் அமைப்பு – பிரித்தானியாவின் செயலாளர் இ.ஜெயதேவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
முதல் அமர்வின் பேச்சாளரகளாக முன்னாள் கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தின் பணிப்பாளர் க.பாஸ்கரதாஸ், கிழக்குப் பல்கலைக்ககழக சிரேஸ்ட விரிவுரையாளர் பாரதி கென்னடி, கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.சிவரெட்ணம், ஓய்வு பெறற கிராம சேவையாளர் எம்.முத்துலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது அமர்வில் மைக்கல் மதி, கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், பொருளியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கே.சுரேஸ், மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் செயலாளர் க.ஹரிதாஸ், ஏறாவூர் பற்று மாற்றுத்திறனாளிகள் அமைபபின் தலைவர் கங்கேஸ்வரன் அன்புமாறன் ஆகியோர் உரையாற்றினர்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் அரச திணைக்கள அதிகாரிகள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
இறுதியில் மக்களுடனான கலந்துரையாடல் மற்றும் கருத்துக்களுடன் இலங்கைக்கான புலம்பெயர் அமைப்பு – பிரித்தானியாவின் செயலாளர் இ.ஜெயதேவன் கருத்துரை, புலையவெளி கிராம அமைபபினைச் சேர்ந்த அஜந்தனின் நன்றியுரையுடன் மகாநாடு நிறைவு பெற்றது.