மட்டு எம்பிக்களிடம் உருக்கமான வேண்டுகோள்

#மட்டக்களப்பு_பாராளுமன்ற _உறுப்பினர்களிடம்_உருக்கமான_வேண்டுகோள்
.
.
.
தற்போதைய ஐ.தே.க. அரசாங்கமானது அமையப்பெற்றுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பினரினதும் ஏனைய சிறுபான்மை கட்சிகளினது வெளிப்படையான ஆதரவுடனேயே ஆகும். ஆனாலும் அமைச்சரவை தீர்மானங்களை வாசிக்கும் போது எமது மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு அமைச்சரவை தீர்மானத்தையும் வாசிக்க கிடைப்பதில்லை. அமைச்சரவையில் எமது பிரதேசத்துக்கான பிரதிநிதித்துவம் இல்லாததுகூட மட்டக்களப்பு வறுமையில் அதன் காரணமான தற்கொலைகளில் முன்னிலை பெறுவதும் காரணமாய் அமையலாம்.

இன்னம் குறைந்தது ஒரு வருடம் பாராளுமன்றமும் அமைச்சரவையும் நிலைக்கவுள்ள நிலையில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் நிறைவேற்றக்கூடியவற்றிற்கான அமைச்சரவை அனுமதியை பெறக்கூடிய அமைச்சரவை பத்திரங்களை தயார்படுத்துவதற்கேதுவான.திட்ட முன்மொழிவுகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு சமர்ப்பிப்பீர்களாயின் நீங்களும் தாய் மண்ணை நேசிப்பவர்களில் ஒருவரென நாம் நம்பலாம்.
.
1. மாவட்டத்தில் குடிநீர் இல்லாத ஊர்கள் எத்தனை, பல ஊர்களினூடாகவே குடிநீர்குழாய்கள் நகரத்திற்கு செல்கின்றன.
2. மின் வசதிகளை பெற்றுக்கொள்ளாத கிராமங்கள்.
3. படுவான்கரை பிரதேசத்திற்கு அதன் பரப்பவிளற்கும் குடித்தொகைக்கும் ஏற்ப இரண்டு ஆதார தரத்திலான வைத்தியசாலைகள் அமைதல் வேண்டும்.
4. படுவான்கரை மற்றும் எழுவான்கரையிலும் கூட தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆராய்ந்து பாருங்கள்.
5. இளைஞர் வலுவூட்டல் வழிகாட்டலுக்கமைவாக மஞ்சந்தொடுவாய்தொழில்நுட்பக் கல்லூரியின் பின்னர் இவ்வாறு எந்த கல்லூரிகளும் உருவாக்கம் பெறவில்லை.
6. உற்பத்தி மற்றும் அதன் விற்பனையை அதிகரிப்பதற்கான பொருளாதார மத்திய நிலையங்கள்
7. மீனவர் தொடர்பில் அவர்களது படகுகளை நிறுத்தி வைப்பதற்கு மீனவத்துறைமுகங்கள்
8. உள்ளூராட்சி சபைகளாலும் மாகாண சபையாலும் ஆளுகை செலுத்தப்பட முடியாத பாதைகள், குளங்கள், பாலம்கள் இவற்றின் புனரைப்பு மற்றும் கட்டுமாணம்.
9. நெற் களஞ்சியம் மற்றும் நெல்லினை அரசாங்கம் வாங்குவதற்கான பொறிமுறைகள்
10. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களுக்கான நஸ்ட்ட ஈட்டு கோரிக்கைகள்
11. கால்நடை வளர்ப்பினை நமது பிரதேசத்தில் ஊக்குவிப்பதற்கான அரச செயற்றிட்டங்கள் இதனை போலவே நன்னீர் உவர் நீர் மீன் வளர்ப்பு தொடர்பிலான செயற்றிட்டங்கள்
12. கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட வேண்டிய பீடங்கள் சட்டத்துறை, ஆழ்கடல் மற்றும் கடற்றொழில் நீரியல் கற்கை தொடர்பான பீடம், உணவு & ஊட்டச்சத்து தொழில்நுட்பம்
13. மட்டக்களப்பு தாதியர் கல்லூரி சிங்களமயப்படுத்தப்படுதலுக்கெதிராக குரல் கொடுங்கள் ஏனெனில் இவற்றின் வெளியீடான சிங்கள தாதியர்களை கொண்டே கிழக்கு வைத்தியசாலைகள் நிரப்பபடும்போது எமது நோயாளிகள் சிங்களம் தெரிந்த ஒருவரை கூட்டிச்செல்ல வேண்டிய தேவை எதிர்காலத்தில் தோன்றும்.

இதனை விட முஸ்லிம் நகர்களிலும் பல தேவைகள் உள்ளன குறிப்பாக திண்மக்கழிவு முகாமைத்துவம், நீர் வடிகாலமைப்பு, மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு போன்றவற்றுடன் ஆடம்பர மற்றும் சொகுசு தொடர் மாடி குடியிருப்புகளை அமைப்பது மட்டக்களப்பிற்கு வானுயர்ந்த கட்டிடங்களை கொண்டுவரும்.

இவற்றை விட்டுவிட்டு விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ஆலயங்களுக்கு ஸ்பீக்கர், கதிரைகள் என எம்ஜிஆர் காலத்து டெக்னிக்கில் திரியாமலும் றோட்டு போடுறன் என்டு உள்ளூராட்சி சபைகள்ட வேலைகளை செய்யாமலும் புது அரசியலமைப்பு சட்டத்தினால் தீர்வென வாயால வடை சுடாமலும் மத்திய அரசிற்குரிய காரியங்களை செய்து முடிப்பதற்கு திணைக்களின் தலைவர்களும் சரியான தகவல்களை வழங்கி மாவட்டத்தின் தேவையை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

DiresanGnachelvam