இன்று கிழக்கு ஆளுநர் அம்பாறை கச்சேரிக்கு விஜயம்!படையின்வசமிருந்த காணி விடுவிப்பு!

 
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல.எ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (18) வெள்ளிக்கிழமை காலை அம்பாறைக்கச்சேரிக்கு விஜயம் செய்தார். அவருடன் அவரது செயலாளர் அசங்கஅபேவர்த்தனவும் சமுகமளித்திருந்தார். ஆளுநரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க வரவேற்றதைத்தொடர்ந்து கச்சேரியின் எ.ஜ.விக்ரம அரங்கில் சந்திப்பும் நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு உயரதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.அங்கு  படையின்வசமிருந்த காணி விடுவிப்புச் செய்யப்பட்ட பத்திரங்கள் கையளிக்கப்பட்டன. அவை அரசாங்கஅதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டன. அட்டாளைச்சேனைபிரிவிலுள்ள பள்ளக்காட்டுப்பிரதேசத்தில் படையினர்வசமிருந்த  38ஏக்கர் காணி  வனபரிபாலனத்திணைக்களத்திடம் கையளிக்காமல் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.. பின்பு அவர் உரையாற்றினார். அதன்பின்பு ஊடகவியலாளர்களின் சந்திப்பும் இடம்பெற்றது.அதில் அரசஅதிபர் பண்டாரநாயக்க படைஉயர் அதிகாரி சகிதம் கலந்துகொண்டதைக்காணலாம்.
 
படங்கள் காரைதீவு  நிருபர் சகா