உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தி

2018 ஜிசிஈ உயர்தரப் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக பெறுபேறுகளை விரைவில் அறிவிக்கலாமென திணைக்களத்தின் மேலதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானவுடன் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.