வாழைச்சேனையில் சிறுவன் கொலை

மட்டக்களப்பு – வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் 15 வயது சிறுவன், கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

3 இளைஞர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, குறித்த சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தநிலையில், தாக்குதலுக்குள்ளான சிறுவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீராஓடையை சேர்ந்த 21, 23 மற்றும் 25 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.