மட்/புனிதமிக்கல் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு கால் கோள் விழா.

முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பிரதி அதிபர் எஸ்.தயாபரனின் தலைமையில் அதிபர் பயஸ் ஆனந்தராஜா  அவர்களின் வழிகாட்டலில்  மறைமாவட்ட ஆயர் பேரருள்திரு கலாநிதி பொன்னையா யோசப்பின் பிரதம பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த முதலாம்தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் புதிதாக பாடசாலையில் இணைந்துள்ள 160 மாணவர்கள் அதிதிகளாகக்கலந்து கொண்டனர்.

புனித மிக்கேல் கல்லூரி – தேசியப்பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா, பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அருட்தந்தை ஜே.ஸ்ரனிஸ்லொஸ், பிரதி அதிபர் வெஸ்லியோ வாஸ், கலாநிதி  கே.தேவநம்பி, ஆரம்பப்பிரிவு தலைவியான ஆசிரியை ஜே.உதயதேவி உள்ளிட்டோருடம் மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், மும் மத இறை பிரார்த்தனை, வரவேற்பு நடனம், தொனிப்பொருள் வரவேற்பு, மாணவர்களின் பல்வனைக நடன நிகழ்வுகளுடன் இன்றைய புனித மிக்கேல் கல்லூரியின் முதலாம் தர மாணவர்களுக்கான கால் கோள் விழா நடைபெற்றது.

பாடசாலைப் பாரம்பரியத்தில் சிறப்பானதொரு நிகழ்வாக கருதப்படும் இந் நிகழ்வில், தரம் ஒன்றுக்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதையடுத்து இரண்டாம் தர மாணவர்களினால் முதலாம் தர மாணவர்கள் வரவேற்கப்படுவது வழமையாகும். இது முதலாம் தர மாணவர்களுக்கான கால் கோள் விழா என்றும் அழைக்கப்படுகிறது.

தேசிய ரீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதலாம் தரத்திற்கு இவ்வருடம் இணைக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன.