புனிதமிக்கல்கல்லூரி முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு

புனித மிக்கேல் கல்லூரியில் முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

முதலாம் தர மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருள்திரு பொன்னையா யோசப் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பாடசாலைப் பாரம்பரியத்தில் சிறப்பானதொரு நிகழ்வாக கருதப்படும் இந் நிகழ்வில், தரம் ஒன்றுக்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதையடுத்து இரண்டாம் தர மாணவர்களினால் முதலாம் தர மாணவர்கள் வரவேற்கப்படுவது வழமையாகும். இது முதலாம் தர மாணவர்களுக்கான கால் கோள் விழா என்றும் அழைக்கப்படுகிறது.

தேசிய ரீதியில் நாளை வியாழக்கிழமை முதலாம் தரத்திற்கு இவ்வருடம் இணைக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.