கொல்லநுலையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு பாடசாலையில் வியாக்கிழமை(10) இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 15மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளையினரால், தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு கால்நடையாக சமுகம் கொடுக்கின்ற, துவிச்சக்கரவண்டியினை கொள்வனவு செய்வதில் இடர்படுகின்ற மாணவர்களுக்கே இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த துவிச்சக்கர வண்டிகளை கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளையின் உப தலைவர் சி.சிறிறஞ்சன், பழைய மாணவர் சங்கத்தின் இலங்கைக்கான செயலாளர் எஸ்.தயாபரன், மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தி.தவனேசன் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.

இதன்போது, பாடசாலை சமுகத்தினரால் பழைய மாணவர்சங்க பிரதிநிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.