புதிய அரசியலமைப்பு வராத பட்சத்தில் நாடு இக்கட்டான நிலைக்கு செல்லும்.இரா.சம்பந்தன்.

“புதிய அரசியலமைப்பை கொண்டுவர பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமென நீங்கள் கூறுவது சட்டத்திற்கு முரணானது. புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லும். அப்போது எல்லா இன மக்களும் அதற்கு தமது அபிப்பிராயத்தை தெரிவிப்பார்கள். அப்படியாயின் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டுமென நீங்கள் கோருவது அநீதியானது…

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை தருவதாக நீங்கள் கூறியதால் தான் புலிகளை ஒழிக்கும் உங்களது முயற்சிக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பை வழங்கியது. சர்வதேசத்திற்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை மறக்க வேண்டாம்…

இந்த புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராத பட்சத்தில் – அரசியலமைப்பு வராத பட்சத்தில் நாடு ஒரு இக்கட்டான நிலைக்கு செல்லுமென்பதை கூறிவைக்க விரும்புகிறேன்…”

இவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் உரைக்கு பதில் வழங்கும் வகையில் குறிப்பிட்டார்…

நன்றி

சிவராசா