பொங்கலன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இன்று (09)  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

வவுனியாவில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 688 ஆவது நாளாக முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இன்று மதியம் 12.00 மணிக்கு தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து நடைபவனியாக வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள உண்ணாவிரதக் கொட்டகையை சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த, தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா

 

தங்களுக்கு எதிராக சிலர் சங்கம் அமைத்து செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியதுடன் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.