அரச பணியாளர்களின் சம்பளம் ​அதிகரிக்கப்படவுள்ளது

அரச பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் 2500 ரூபாயிலிருந்து 10,000 வரை அதிகரிக்கத் தீ​ர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பானது இந்த மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசின் ஆரம்பப் பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் 2500 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் உயர்மட்ட அதிகாரிகளின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2015ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரை அரச பணியாளர்களின் சம்பளம் 85 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு இருக்கும் கடன் நிலையில் அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.