சிவனேசதுரை சந்திரகாந்தனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) வழக்கு விசாரணை பெப்ரவரி 21,22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது பற்றிய கட்டளை வாக்குமூல விசாரணை இன்று புதன்கிழமை 09 ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிரிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும், வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அரச சட்டத்தரணி மாதவ தென்னகோனும் தத்தமது சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 1,2 ஆம் எதிரிகள் வழங்கிய  குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்றது.