திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படை பெற்றுக் கொண்டுள்ளதா ?

கிழக்கின் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் உடன்படிக்கையை அரசாங்கம் செய்யவுள்ளதா என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி ஆளும் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தின் போது கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச : –

அமெரிக்க கடற்படையின் கடற்படை பயிற்ச்சிகளுக்கும் அவர்களின் இராணுவ நகர்வுகளுக்கும் இலங்கையின் கிழக்கில் முகாம் ஒன்றினை வழங்க அரசாங்கம் தீர்மானம்  எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. குறிப்பாக கிழக்கில் திருகோணமலை துறைமுகத்தை அவ்வாறு வழங்க உடன்படிக்கை செய்துள்ளதாக  தகவல்கள் மூலமாக அறிய முடிகின்றது. உண்மையில் அரசாங்கம் அவ்வாறான தீர்மானம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதா, அமெரிக்க கடற்படை அவ்வாறு கைப்பற்றியுள்ளதா  என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் :- அவ்வாறு எந்தவொரு  உடன்படிக்கையும்  செய்துகொள்ளப்பட்டுள்ளதா என எனக்குத் தெரியாது, இதனை பாதுகாப்பு அமைச்சரிடமே கேளுங்கள் என பதில் தெரிவித்தார்.