கால்நடை உரிமையாளர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்து வரும் கால்நடைகளுக்கு நஸ்ர ஈடு வழங்ககுமாறு பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். மூதூர் பிரதேசத்தில் அதிகளவிலான கால்நடைகள் இறந்துள்ளன.
மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இறந்துள்ள மாடுகளை பெக்கோ இயந்திரம் கொண்டு புதைக்கும் பணி மூதூர் பிரதேச சபையின்  தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில்இ தோப்பூர் கரைச்சை காட்டுப் பகுதியில் இன்று (08) காலை முன்னெடுக்கப்பட்டது.
தோப்பூர் நல்லூர் சம்பூர் பள்ளிக்குடியிருப்பு  பகுதிகளில் அதிகளவான மாடுகள் இறந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக இறந்த மாடுகள் புதைக்கப்பட்டன.
மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 600க்கும் அதிகமான  மாடுகள் இறந்துள்ளதோடு தொடர்ந்தும் இறந்து வருகின்றன.
இதேவேளை மாடுகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இறந்த மாடுகளின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்இ அதன் முடிவுகள் வரும் வரையில் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 14 இறைச்சிக் கடைகளும் தற்காலிகமாக மூதூர் பிரதேச சபையால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் பிரதேசத்தில்இறந்  கால்நடைகளுக்கு நஸ்ர ஈடு வழங்ககுமாறு பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்