தம்பலகமம் ஆதிகோணேஸ்வரத்தில் தேசிய பொங்கல் விழா

பொன்ஆனந்தம்

இம்முறை நடைபெறும் தேசிய பொங்கல் விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு அனைத்து பிரிவனரும் அமைப்புக்களும் பங்களிப்பை வழங்கவேண்டும் திருமதி ஸ்ரீபதி தெரிவித்தார்.

2019ம் ஆண்டுக்கான  தேசிய பொங்கல் விழா தம்பலகமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தில்

இம்முறை நடைபெறவுள்ளமையைமுன்னிட்டு    கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி .ஸ்ரீபதி தலைமையில் தி/ ஆதி கோணேஸ்வரா பாடசாலை மண்டபத்தில் (2019.01.08 ) இன்று நடைபெற்றது. பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் பற்றி இங்கு ஆராயப்பட்டன.

இதன் போது ஆதி கோணநாயகர் ஆலய நி  ரு வாகம், , இளைஞர் பேரவை ,இளைஞர் களக சபை தம்பலகாம பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை நி ரு வாகம், ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், ஊர் தலைவர்கள், இளைஞர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.