நஞ்சற்ற உணவுப்பொருட்களை உண்பதன் ஊடாக வைத்தியசாலைகளைமூடிவிடலாம் .

நஞ்சற்ற உணவுப் பொருள்களை உண்ணத் தொடங்குவதன் மூலம் வைத்தியசாலைகளை மூடத்தொடங்கலாம்  – மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்

உணவுக்கடைகளின் உணவுகளை உண்பதனைக் குறைத்து வீட்டுத் தோட்டங்களை வீடுகளில் அமைப்பதன்மூலம் நஞ்சற்ற பொருள்களை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் ஊடாக வைத்தியசாலைகளை மூடத் தொடங்கலாம் என்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரணவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற ஹோமயோபதி வைத்தியசாலை திறப்பு விழாவில் சிறப்பு அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மக்களின் நோய்களைக் குணப்புடுத்துவதற்கான வைத்தியசாலைகள்  அதிகரிக்கப்படுவது நல்லவிடயமாகும். அதே நேரத்தில் நோய்களைத் தடுப்பதற்கான காரணிகளில் மிகக்கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமான காலகட்டத்திலும் இருக்கிறோம். இன்று தொற்றாத நோய்களின் பாதிப்பு  மிகக் கூடுதலாக இருக்கிறது. இதற்குக்காரணங்களாக நம்முடைய பழக்கவழக்கங்களை மிக முக்கியமாகச் சொல்லலாம். எங்களுடைய உணவு, உடற்பயிற்சி சம்பந்தமானவை இதில் முதன்மை வகிக்கின்றன.
இன்காறைய பா லகட்டத்தில் எங்களுடைய உணவுப்பழக்கவழக்கங்களை பாதிப்புச் செலுத்துவதை ஊடகங்கள் ஊடாக அறிய முடிகிறது, அனுபவங்கள் ஊடாகவும் இதனை உணர்ந்து கொள்ள முடியும். முன்பெல்லாம் ஒரு நீரழிவு என்றால் உங்களுடைய குடும்பத்தினர் தொடர்பில் ஆராய்வார்கள். இப்பொழுது அவ்வாற ஆராய்வதனைவிடவும் பழக்கவழக்கங்களால் அவ்வாறான நோய்களுக்கு உள்ளாவது அதிகமாக இருக்கிறது. ஹோமியோபதி போன்ற வைத்தியங்கள் பக்க விளைவுகளற்றதாக இருக்கிறது.

ஒரு மருந்தைப் பயன்படுத்தம் போது இன்னொரு நோய்க்குரிய பக்கவிளைவினை ஏற்படுத்தவதாக இருக்கிறது. ஆங்கில வைத்தியங்களைப் பெறும் பொது ஒரு நோய்க்குரிய  மருந்து மற்றொரு நோயைக் தோற்றுவிககிறதா எனற சந்தேகங்கள எழத் தொடங்குகின்றன. ஆனால் இயற்கையோடு, மூலிகைகளோடு சம்பந்தப்பட்ட வைத்தியங்கள்  பக்கவிளைவுகளைத் தவிர்த்து தீர்வுகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது.

இயற்கைளை மீறுகின்ற விடயங்கள் தான் கூடுதலாக இருக்கிறது. 90 வீதமான பொருட்களில் நஞ்சு கலந்திருக்கிறது. பொலித்தீன் பாவனை இதில் முக்கியமானது. உணவு விடுதிகளில் சாப்பாடு சுற்றும் பைகளில் ஊதிவிட்டே பொதி செய்கிறார்கள். அவ்வாறு செயற்பாடுகளில் தொடங்கி அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது.

விவசாயத்திணைக்களத்தின் தகவல்களைப் படிக்கும் பொழுது கத்தரியினை நடுகை செய்யும் போது பூச்சித்தாக்கத்தினைத் தவிர்ப்பதற்காக அதன் அடியில் இரசாயனப் பொதியொன்றை இட்டே நடுகிறார்கள். அதே போல நாங்கள் கொள்வனவு செய்யும் வல்லாரை, கீரை என அனைத்திலும் நஞ்சு. இதனை நமது வீட்டில் நடுகை பண்ணிப்பார்த்தால் பூச்சுத் தொல்லை காரணமாக சீரான ஒரு அறுவடையினைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால்சந்தையில் மாத்திரம் திருப்தியான பொலிவான மரக்கறிகளைக் கொள்வனவு செய்யமுடிகிறது.

எனவே நாங்கள் இவ்வாறான விடயங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியவர்களாக, நஞ்சற்ற உணவுக்கான பாதுகாப்புடன் செயறபட வேண்டியவர்களாக இருக்கிறோம். அவ்வாறான பாதுகாப்பு முறைகளை பெற்றோர்கள் கடைப்பிடிக்கப் பழகிக்கொண்டதால் வைத்தியசாலைகளை மூடிக்கொண்டு வரலாம்.