13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் .கிழக்கு ஆளுநர் .

                 (மூதூர்நிருபர்)

13வது சட்ட திருத்தத்தினை முழுமையாக அமுழ்ப்படுத்தி அதனூடாக மாகாண நிர்வாக கட்டமைப்புகளை சிறப்பான முறையில் முன்கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் கவனம் செலுத்தப்போவதாக கிழக்கு மாகாண ஆளுனராக பதவிப்பிரமானம் செய்து கொண்ட கலாநிதிஎம்.எல்..எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்

 இன்று (07) திருகோணமலையில் உள்ள கிழக்குமாகாணஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஆளுனர்செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தநிகழ்வில் கலந்துகொண்டார்

குறித்த நிகழ்வில் பிரதம செயலாளர் சரத்அபயகுணவர்தன, முதலமைச்சரவைச்செயலாளர் யூ.எல்.. அஸீஸ் ஆளுனரதுசெயலாளர்  அசங்க அபோவர்தன மாவட்டஅரசாங்க அதிபர் என்... புஸ்பகுமாரபிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும்திணைக்களங்களது செயலாளர்கள் அரசஅதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்தஆளுனர் அவர்கள் தாம் பாராளுமன்றஉறுப்பினர்  பதவியினை ராஜினாமாசெய்துவிட்டு குறித்த ஆளுனர்பதவியினை ஜனாதிபதியிடம் இருந்துபொறுப்பேற்றுக்கொண்டதாகதெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஆளுனர்என்ற அடிப்படையில் சிறப்பானதீர்மானங்களை நிறைவேற்றி அதனூடாகமாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கானநடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும்தெரிவித்தார்

குறிப்பாக 13வது சட்ட திருத்தத்தினைமுழுமையாக அமுழ்ப்படுத்தி அதனூடாகமாகாண நிர்வாக கட்டமைப்புகளைசிறப்பான முறையில்

முன்கொண்டு செல்வதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் தாம் கவனம்செலுத்தப்போவதாக தெரிவித்தார்

ஆசிரியர்கள் குறைபாடுகள் தொண்டர்ஆசிரியர் சம்பந்தமான பிரச்சினைகள்சிற்றூளியர்களது குறைபாடுகள் சுகாதாரம்கல்வி வீதி போன்ற மாகாணத்திலுள்ளகுறைபாடுகளை வெகு விரைவில் நிவர்த்திசெய்வதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் எடுக்கவிருப்பதாகதெரிவித்தார்.