மட்டக்களப்பில் சிறுமியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க காhரியாலயத்திற்கு அருகில்  உள்ள ஆற்றில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை (05) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமி யை காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்;த சிறுமியை காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் இடம்பெற்றது
இதனையடுத்து குறித்த சிறுமிiயின் சடலத்தை ஆற்றில் தேடிவந்த நிலையிலேயே இந்த சடலம் ஆற்றில் கரை ஓதுங்கிய நிவையில் இன்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீட்டகப்பட்டுள்ளது
இதேவேளை
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2 குறுக்கு வீதியைச்  சேர்ந்த 16 வயதுடைய  கிருஸ்ணபிள்ளை கிருஷhந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதுடன்
குறித்த சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற  இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் சம்பவதினமான பிற்பகல் 2 மணியளவில்  சம்பவத்தின் போது கல்லடி பாலத்தில் காதலன் மற்றும் காதலனின் நண்பருடன் சந்தித்த நிலையில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே சம்பாசனை இடம்பெற்றவேளை காதலி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காதலனுக்கு நீந்த தெரியாததால் நண்பன். நண்பனின் காதலியை காப்பாற்ற ஆற்றில் குதித்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் அவர் நீந்தி கரைசேர்ந்தாகவும் அவரின் சடலத்தை காணமுடியவில்லை என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது